Friday, March 23, 2012

Adobe photoshop cs6 beta பதிப்பினை தற்போது இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும்

மிகசிறந்த புகைப்பட வடிவமைப்பு மென்பொருளான adobe photo shop மென்பொருளின் புதிய CS6 பீட்டா பதிப்பினை தற்போது இலவச தரவிறக்கத்திற்கு adobe தளத்தில் வெளியிடபட்டுள்ளது.
மிக பெறுமதி வாய்ந்த இந்த மென்பொருளை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்க .
விண்டோஸ் மற்றும் mac இயங்குதளங்களுக்கான பதிப்பினை பெறலாம்.
முகவரி http://labs.adobe.com/downloads/photoshopcs6.html

Download As PDF

Wednesday, March 21, 2012

விற்பனையில் சாதனை படைத்த ஆப்பிளின் The new iPad

கணினிகளை கையடக்கத்தில் கொண்டு வந்த பெருமை ஆப்பிள் நிறுவனத்தையே சாரும். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளின் மீது எப்பொழுதும் நன்றாக இருக்கும் என்ற தனி நம்பிக்கை இருக்கும். ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் மார்ச்16 ஒரு புதிய டேப்லெட் கணினியை அறிமுக படுத்தினர். இதற்க்கு New iPad என்று பெயர் சூட்டினர். உலகில் இப்பொழுது இருக்கும் எந்த ஒரு டேப்லெட் கணினிகளிலும் இல்லாத வசதிகளை உள்ளடக்கி இந்த புதிய New iPad வெளியிட்டு உள்ளனர். நவீன தொழில்நுட்பத்தை விரும்பும் அனைவருக்குமிடையில் இது மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று உள்ளது. இந்த டேப்லெட் கணினிகள் மூன்றே நாட்களில் 30 லட்சம் டேப்லெட் கணினிகளை விற்று தீர்ந்து விட்டன.
WiFi மற்றும் WiFi + 4G என்ற இரு மாடல்களில் இந்த New iPad வெளிவந்துள்ளது. இதில் உள்ள சில சிறப்பம்சங்களை பற்றி கீழே காணுங்கள்.

Specs:
  • Retina Display
  • Height: 9.50" Width: 7.31" Depth: 0.37" Weight: 1.44 pounds (652 g)
  • 16GB , 32GB , 64GB depend upon your investment
  • Display 2048-by-1536-pixel resolution at 264 pixels per inch
  • 5-megapixel iSight camera
  • Wi-Fi (802.11a/b/g/n)
  • It has 42.5-watt-hour rechargeable lithium-polymer battery. You can Up to 10 hours of surfing the web on Wi-Fi, watching video, or listening to music.
இந்த கணினிகள் மேலும் 24 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அப்படி அறிமுகம் ஆகும் பட்சத்தில் இந்த விற்பனை எண்ணிக்கை மேலும் கணிசமாக அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இந்த காலாண்டு இறுதிக்குள் சுமார் 12 மில்லியன் New iPad கணினிகளை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.


இந்த கணினிகளை ஆன்லைனில் வாங்கவும் இதனுடைய விலைப்பட்டியலை காணவும் இங்கு செல்லுங்கள்.
Download As PDF

Monday, March 19, 2012

அபார வளர்ச்சியில் PINTEREST சமூக இணைய தளம் INVITE வேண்டுமா?


சமூக தளங்களின் போட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. பல போட்டிகள் இருந்தாலும் வாசகர்களுக்கு சிறப்பான வசதிகளுடன் வித்தியாசமாகவும் இருந்தால் கண்டிப்பாக வாசகர்களின் அமோக ஆதரவு அந்த இணைய தளத்திற்கு உண்டு என்பதை நிருபித்து காட்டியுள்ளது PINTEREST என்ற சமூக இணையதளம். பெரும்பாலான சமூக இணையதளங்களும் ஒரே மாதிரியான வசதிகளை Friends, Chatting, Sharing, like இப்படி ஒரே மாதிரியான கொண்டு இருக்கும் ஆனால் Pinterest சற்று வித்தியாசமானது. ஒரு போட்டோ ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பதை சரியாக பயன்படுத்தியுள்ள சமூக இணையதளம் Pinterest.


சிறப்பம்சங்கள்:
  • இந்த தளத்தில் நீங்கள் போட்டோ அல்லது வீடியோக்களை மட்டும் தான் பகிர முடியும் சாதாரண செய்திகளை பகிர முடியாது.
  • இந்த தளத்தின் தோற்றம் பெரும்பாலானவர்களை கவரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த Pinterest தளத்தில் உங்கள் பிளாக்கில் உள்ள போட்டோக்களை நேரடியாக பகிர்ந்து உங்கள் பிளாக்கின் வாசகர்களை(Traffic) அதிகரித்து கொள்ளலாம்.
  • போட்டோ அல்லது வீடியோ பகிரும் பொழுது அதற்க்கு சம்பந்தமாக தனி தனி பிரிவுகளில் பகிரலாம். மொத்தம் 30 க்கும் அதிகமான வகைகள் இந்த தளத்தில் உள்ளது.
  • குறைந்த நாட்களிலேயே மாதத்திற்கு 21 மில்லியன் வாசகர்களை பெறும் சிறந்த சமூக இணையதளமாகும்.
ஆனால் இந்த சமூக இணையதளத்தில் நேரடியாக கணக்கு ஓபன் செய்து உபயோகிக்க முடியாது. முதலில் இந்த தளத்தில் சென்று உங்கள் ஈமெயிலை கொடுத்து INVITE அனுப்ப வேண்டும் பிறகு அவர்கள் உங்களுக்கான உறுப்பினர் விவரங்களை மெயிலில் அனுப்புவார்கள். பிறகு தான் உங்களால் Pinterest தாளத்தை உபயோகிக்க முடியும்.

உபயோகிப்பது எப்படி:
Approval கிடைத்தவுடன் இந்த தளத்தில் நுழைந்து Add என்பதை அழுத்தி வரும் விண்டோவில் உங்களுடைய போட்டோ இணையத்தில் இருந்தால் Add a Pin என்பதையும் உங்கள் கணினியில் இருந்தால் Upload a Pin என்பதையும் அழுத்தி உங்களுடைய போட்டோவை தேர்வு செய்து உங்களுடையை போட்டோவை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்.


INVITE வேண்டுமா?
Pinterest தளத்தில் ஏற்க்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்கள் invite மூலம் உடனடியாக இந்த தளத்தில் இணைய முடியும். நானும் ஏற்க்கனவே இதில் உறுப்பினராக இருப்பதனால் என்னாலும் Invite அனுப்ப முடியும். உங்களுக்கு Invite வேண்டுமென்றால் கீழே கமென்ட் பகுதியில் உங்களின் ஈமெயில் ஐடியை கொடுத்தால் உங்களுக்கு இதன் Invitation அனுப்பி வைக்கிறேன்.

Pinterest தளத்தில் என்னை தொடர கீழே உள்ள போட்டோ மீது க்ளிக் செய்யவும்.







இதில் உள்ள வசதிகள் மற்றும் பயன்படுத்தும் விதம் ஆகியவைகளை பற்றி விரிவாக வரும் பதிவுகளில் காணலாம்.

தொடர்புடைய இடுகைகள்:
  1. How to change your User name(URL) on Pinterest
  2. How to Show (or) Hide your Pinterest profile page in Search Engines
  3. Expand pinterest images without a click - Pinterest image Expander [Chrome]
  4. How to add "Follow Me on Pinterest" badge on your blog and website
Download As PDF

Sunday, March 18, 2012

யாஹூ/Yahoo மெயிலில் பயன்படும் Keyboard Shortcuts


கணினி உபயோகிக்கும் அனைவரும் தங்கள் செய்யும் செயலை விரைவாக முடிக்க தங்களுக்கு தெரிந்த எளிய Shortcut களை பயன்படுத்துவர். அந்த வகையில் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் கணக்குக்கும் சில எளிய Shortcut களை பயன்படுத்த முடியும். இன்று யாஹூ மின்னஞ்சலுக்கான Shortcut களை இன்று பார்க்கலாம்.




அடிக்கடி பயன்படும் shortcutகள்


செயல்
Keyboard Shortcut
மெயில் அனுப்ப
Ctrl+Enter : send e-mail
Check all mail (includes POP accounts)
Shift+M
புதிய மெயில் compose செய்ய
N

reply செய்ய
R

reply all
A

forward e-mail
L

mark as read
K

flag e-mail

PC: Ctrl+\ or Esc
Mac: Cmd+\ or Esc

clear flag

Shift+L

check e-mail (go to inbox)
M

move to next tab
Ctrl+]

move to previous tab
Ctrl+[

Ctrl+S
save as draft

delete e-mail
Delete

தேட
S
எல்லா Keyboard Shorcut-களையும் அறிய
?


மேலும் அதிகமான Yahoo குறுக்கு விசைகள் (Shortcuts) பற்றி தெரிந்து கொள்ள, இந்த பக்கத்துக்கு செல்லவும்.

Download As PDF

Tuesday, March 13, 2012

பேஸ்புக்கில் புதிய பயனுள்ள வசதி INTERESTS உபயோகிப்பது எப்படி?

உலகம் முழுவதும் 800 மில்லியனுக்கும் அதிகமான வாசகர்களை கொண்ட ஒரே சமூக இணையதளம் பேஸ்புக் ஆகும். சமூக இனியதலங்களுக்கு இடையே நடைபெறும் போட்டியில் பேஸ்புக் யாரும் தொட முடியாத இடத்தில் உள்ளது. பேஸ்புக் உச்சத்தில் இருந்தாலும் அதன் வாசகர்களை கவர அடிக்கடி ஏதாவது ஒரு வசதியை அப்டேட் செய்து கொண்டே உள்ளது. அந்த வகையில் இப்பொழுது பேஸ்புக்கில் Interest என்ற புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.






Interest வசதியை பயன்படுத்துவது எப்படி:
பேஸ்புக்கில் நிறைய நபர்களிடம் நண்பர்களாக இருந்தாலும் ஒரு சில பேர் பகிர்வது உங்களுக்கு மிகவும் பிடித்து பிடித்து இருக்கும். அப்படி உங்களுக்கு பிடித்த நபர்களின் பகிர்வுகளை மட்டும் தனியாக பார்க்க உதவுவது தான் இந்த interest வசதி.
  • முதலில் உங்கள் பேஸ்புக் தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் இடது பக்கத்தில் கீழ் பகுதியில் Interest என்ற புதிய வசதி இருப்பதை காண்பீர்கள் அதன் மீது க்ளிக் செய்யவும்.
  • அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் CREATE LIST என்ற பட்டனை அழுத்தவும்.


  • அடுத்து ஒரு Pop-up விண்டோ ஓபன் ஆகும் அதில் நீங்கள் பின்தொடரும் பக்கங்கள், நண்பர்கள், Subscribe செய்யும் பட்டியல் இருக்கும் காணப்படும்.
  • அதில் உங்களுக்கு பிடித்த நபர்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளவும்.

  • உங்களுக்கு பிடித்த நண்பர்களை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள Next என்ற பட்டனை அழுத்தவும்.
  • அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு பிடித்த தலைப்பை கொடுத்து உங்கள் பட்டியல் யாருக்கு தெரிய வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளவும்



    • அடுத்து கீழே உள்ள Done என்பதை க்ளிக் செய்தால் போதும் தேர்வு செய்தவர்களின் பதிவுகள் மட்டும் இனி தனியாக பார்த்து கொள்ளலாம்.
    இதே போன்று தொழில்நுட்பம், அரசியல், அனுபவம் இப்படி உங்களுக்கு பிடித்த நண்பர்களை தனியாக பட்டியலிட்டு கொள்ளலாம்.
    Download As PDF

    Friday, March 9, 2012

    ஜிமெயில் மூலம் இலவசமாக SMS அனுப்பும் புதிய வசதி [தற்பொழுது இலங்கைகும்]

    இணைய பயனர்களில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் கூகுளின் சிறந்த சேவை ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவையாகும். நாளுக்கு நாள் பல்வேறு புதிய வசதிகளை ஜிமெயிலில் புகுத்து வாசகர்களை கவர்கிறது கூகுள் நிறுவனம். இப்பொழுது மேலும் ஒரு பயனுள்ள வசதியை வாசகர்களுக்கு வழங்கி உள்ளது. ஜிமெயில் மூலம் SMS அனுப்பும் வசதி. இந்த வசதியை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது கூகுள் நிறுவனம் ஆனால் இலங்கை  மொபைல்கள் மொபைல் நெட்வொர்க் கம்பெனிகள் சப்போர்ட் செய்யாமல் இருந்தது. இப்பொழுது இலங்கை மொபைல்களும் SMS வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.


    இலவசமாக SMS அனுப்புவது எப்படி:
    முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Chat பகுதியில் நீங்கள் SMS அனுப்ப விரும்பும் நண்பரின் பெயரை டைப் செய்யவும். உங்களுக்கு ஒரு சிறிய மெனு வரும் அதில் Send SMS என்ற வசதியை தேர்வு செய்யுங்கள்.





    அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் நண்பரின் மொபைல் எண்ணை கொடுத்து SAVE பட்டனை அழுத்தவும்.




    இப்பொழுது உங்கள் நண்பரின் மொபைல் விவரம் Contact List-ல் சேர்ந்து விடும். அடுத்து அந்த நண்பருக்கு SMS அனுப்ப விரும்பினால் அவரின் பெயரை கிளிக் செய்தால் Chat Window ஓபன் ஆகும். அதில் Send SMS கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக SMS அனுப்பலாம்.

    அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 50 SMS அனுப்ப முடியும். இலங்கையில் தற்பொழுது Dialog, Etisalat, Mobitel ஆகிய நிறுவனங்களின் மொபைல்களுக்கு SMS அனுப்ப முடியும்.

    மற்ற நாடுகளில் சப்போர்ட் செய்யும் மொபைல் நிறுவனங்களை அறிய-Support Operators
    Download As PDF

    Monday, March 5, 2012

    புதிய தொழில் நுட்பத்தை லேப்டாப்பில் புகுத்தும் ASUS

    alt
    ந்த Graphics processing Unit கொண்ட லேப்டாப்புகள் விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றன. அதனால் இப்போது நிறைய நிறவனங்கள் இந்த வகையான Tablet மற்றும் லேப்டாப்புகளைத் தயாரிப்பதில் மிகத் தீவரமாக இருக்கின்றனர். ஆனால் அப்படிப்பட்ட டிவைஸ்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த softwares தேவைப்படும்.
    மிகவும் சக்தி வாய்ந்த டிவைஸ்களைப் பார்த்தால் ஆசஸை மறக்க முடியாது. ஏனெனில் Asus Transformer Prime ஒரு மிகவும் சக்தி வாய்ந்த டேப்லெட் ஆகும். இந்த டேப்லெட் நடுத்தர மற்றும் உயர் தர கேம்களை support செய்கிறது. தற்போது கேமிங் வசதியை முழுமையாக சப்போர்ட் செய்யும் புதிய நோட்புக்கைத் தயாரிக்க இருக்கிறது Asus. அந்த நோட்புக்கில் மைக்ரோசாப்ட்டின் connect motion sensing controller என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த இருக்கிறது.
    குறிப்பாக புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் Asus பல முறை வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக லேப்டாப்பில் என்விடியாவின் 3D vision sensor பயன்படுத்துவது ஒரு கடினமான காரியம் ஆகும். ஆனால் அதை தனது நோட்புக் பேசிலில் மிக எளிதாகப் பயன்படுத்தியது.
    ஆகவே இப்போது Asus connect தொழில் நுட்பத்தை தனது நோட்புக்கில் பயன்படுத்த இருக்கிறது. குறிப்பாக தனது பேசில் நோட்புக்கில் உள்ள கண்ட்ரோலரில் உள்ள கேமரா மற்றும் சென்சார்களை அகற்றி விட்டு இந்த புதிய தொழில் நுட்பத்தை இணைக்க இருக்கிறது. எனவே வரும் புதிய டேப்லெட் நிறைய சென்சார்களோடு மிகவும் ஸ்டைலாக இருக்கும். மேலும் இந்த லேப்டாப் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும். இந்த தொழில் நுட்பத்தின் மூலம் Asus-ன் லேப்டாப்பில் அருமையாக கேம் விளையாடலாம்.
    Download As PDF

    Saturday, March 3, 2012

    பேஸ்புக் சாட் பட்டியலில் ஆன்லைனில் இருப்பவர்கள் மட்டும் காட்ட - Facebook Chat Fix

    பிரபல சமூக இணையதளமான பேஸ்புக் தளத்தை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. உலகம் 800 மில்லியன் வாசகர்கள் உள்ள ஒரே சமூக இணையதளம் பேஸ்புக். இதில் உள்ள முக்கியமான வசதிகளுள் ஒன்று பேஸ்புக் சாட் வசதியாகும். பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க உதவுவது இந்த பேஸ்புக் சாட் வசதியாகும். இதில் உள்ள ஒரு குறை என்ன வென்றால் சாட் பட்டியலில் ஆன்லைனில் இருப்பவர்கள் மட்டுமின்றி ஆப்லைனில் உள்ளவர்களையும் காட்டும். இதனால் தேவையில்லாமல் பட்டியலின் நீளம் பெரியதாக காணப்படும். இந்த பிரச்சினையை தவிர்த்து பேஸ்புக் சாட்டில் ஆன்லைனில் இருப்பவர்களை மட்டும் தெரியவைப்பது எப்படி என பார்க்கலாம்.

    குரோம் உலவி உபயோகிப்பவர்கள் சுலபமாக இந்த பிரச்சினை தீர்த்து விடலாம். இந்த லிங்கில் கிளிக் செய்து குரோம் நீட்சியைஇன்ஸ்டால் செய்தால் போதும் அடுத்த நிமிடம் உங்களின் பேஸ்புக் சாட் பட்டியலில் காணப்படும் மாற்றத்தை காணுங்கள்.

    நீட்சியை இன்ஸ்டால் செய்வதற்கு முன் இருந்த பேஸ்புக் சாட் பட்டியல்






    நீட்சியை இன்ஸ்டால் செய்த பிறகு உங்களின் பேஸ்புக் சாட்






    படங்களை பார்த்தவுடன் இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிந்து இருக்கும். நீங்களும் இந்த நீட்சியை உங்கள் குரோம் உலவியில் இணைத்து ஆப்லைன் நபர்களை மறைத்து கொள்ளுங்கள்.
    Download As PDF