இணைய
பயனர்களில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் கூகுளின் சிறந்த சேவை
ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவையாகும். நாளுக்கு நாள் பல்வேறு புதிய வசதிகளை
ஜிமெயிலில் புகுத்து வாசகர்களை கவர்கிறது கூகுள் நிறுவனம். இப்பொழுது மேலும் ஒரு
பயனுள்ள வசதியை வாசகர்களுக்கு வழங்கி உள்ளது. ஜிமெயில் மூலம் SMS அனுப்பும் வசதி.
இந்த வசதியை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது கூகுள் நிறுவனம் ஆனால் இலங்கை
மொபைல்கள் மொபைல் நெட்வொர்க் கம்பெனிகள் சப்போர்ட் செய்யாமல் இருந்தது. இப்பொழுது
இலங்கை மொபைல்களும் SMS வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.இலவசமாக SMS அனுப்புவது எப்படி:
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Chat பகுதியில் நீங்கள் SMS அனுப்ப விரும்பும் நண்பரின் பெயரை டைப் செய்யவும். உங்களுக்கு ஒரு சிறிய மெனு வரும் அதில் Send SMS என்ற வசதியை தேர்வு செய்யுங்கள்.
அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 50 SMS அனுப்ப முடியும். இலங்கையில் தற்பொழுது Dialog, Etisalat, Mobitel ஆகிய நிறுவனங்களின் மொபைல்களுக்கு SMS அனுப்ப முடியும்.
மற்ற நாடுகளில் சப்போர்ட் செய்யும் மொபைல் நிறுவனங்களை அறிய-Support Operators



No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.