Saturday, April 28, 2012

கைத்தொலைபேசியில் Youtube வீடியோவை இலகுவாக தரவிறக்க

கைத்தொலைபேசிகளில் Youtube வீடியோக்களை பார்க்கும் போது உங்களை கவர்ந்த வீடியோக்களை தரவிறக்கவேண்டிய தேவை ஏற்படலாம். அடிக்கடி பார்க்கவேண்டிய வீடியோக்களை தரவிறக்கி வைத்திருப்பதன் மூலம் உங்களுக்கென ஒதுக்கப்பட்ட Bandwidth ஐ விரயம் செய்யத்தேவையில்லை. கணினியில் என்றால் இலகுவாக தரவிறக்கிக்கொள்ளலாம். ஆனால் தொலைபேசிகளில் இது சற்று சிரமமானதே.
Symbian, Android மற்றும் Opera Mini உபயோகிக்கும் தொலைபேசிகளில் சிறிய Java Script ஐ உபயோகிப்பதன் மூலம் Youtube வீடியோக்களை இலகுவாக தரவிறக்கிக்கொள்ளலாம்.

அதற்கு முதலில் இந்த இணைப்பில் சென்று Opera Mini Browser ஐ தரவிறக்கிக்கொள்ளுங்கள். Opera Mini

தரவிறக்கி நிறுவிய பின்னர் Opera Mini இன் Book Mark பகுதிக்கு செல்லுங்கள். அங்கு கீழுள்ள Java Script வரிகளை காப்பி செய்து Address என்ற இடத்தில் Past செய்துகொள்ளுங்கள். Title என்ற இடத்தில் Download Youtube என்று கொடுங்கள்.

javascript:d=document;s=d.createElement(“script”);s.src=”http://userscripts.org/scripts/source
/129114.user.js”;d.body.appendChild(s);void(0);

Download Youtube Videos

அதன் பின்னர் தரவிறக்கவேண்டிய வீடியோவிற்கு செல்லுங்கள். வீடியோ பகுதிக்கு சென்றதும் Opera Mini யின் கீழ் பகுதியில் உள்ள Desktop என்பதை கிளிக் பண்ணுங்கள்

அடுத்து Book Mark பகுதிக்கு செல்லுங்கள். அதில் ஏற்கனவே Create பண்ணிய Java Script Bookmark ஐ கிளிக் பண்ணுங்கள். இப்போது Youtube Video Page Refresh ஆகும். Refresh ஆகியதும் வீடியோவின் கீழ் Download பட்டன் ஒன்று இருப்பதை காணலாம்.


அதில் கிளிக் செய்து விரும்பிய Format இல் தரவிறக்கி கொள்ளலாம்.
Download As PDF

Tuesday, April 10, 2012

$49.95 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருள் முற்றிலும் இலவசமாக


இலவச மென்பொருட்களை விட கட்டண மென்பொருளில் அதிக வசதிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து மென்பொருளையும் காசு கொடுத்து வாங்க முடியாததால் பெரும்பாலானவர்கள் இலவச மென்பொருளையும் கிராக் வெர்சனையும் உபயோகிக்கிறார்கள். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி Digiarty நிறுவனம் WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசமாக வழங்குகிறது. இதன் மதிப்பு $49.95 இந்திய மதிப்பில் சுமார் Rs.2,500 ஆகும்.



சிறப்பம்சங்கள்:
  • வீடியோக்களை MKV, MTS/M2TS, MOD, AVI, MPEG, MP4, WMV, MOV, FLV, RM, WebM, Google TV ஆகிய பார்மட்களில் கன்வேர்ட் செய்து கொள்ளலாம்.
  • HD வீடியோக்களை எந்த தரமும் குறையாமல் பைல் அளவை குறைக்கிறது.
  • வீடியோக்களை iPhone, iPad, iPod மற்றும் Android சாதனங்களில் இயங்குமாறு கன்வேர்ட் செய்து கொள்ளலாம்.
  • இந்த மென்பொருளை DVD Burner மென்பொருளாகவும் உபயோகப்படுத்தலாம்.
  • மற்ற கன்வேர்ட் மென்பொருளோடு ஒப்பிடுகையில் மிகவும் வேகமாக இயங்க கூடியது.

    இலவச சலுகையை பெறுவது எப்படி:
    முதலில் இந்த லிங்கில் www.winxdvd.com/giveaway கிளிக் செய்து இலவச சலுகை தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். அங்கு சில முட்டைகள் இருக்கும் அதில் ஒவ்வொரு முட்டையையும் நீங்கள் கிளிக் செய்து உங்களுக்கான இலவச சலுகை தேர்வு செய்ய வேண்டும். கீழே படத்தில் இருப்பது போன்று வரும்.


    இது போன்று வந்தவுடன் Free Download என்ற பட்டனை அழுத்தி மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளவும். மற்றும் இதில் உள்ள இலவச லைசன்ஸ் கீயை காப்பி செய்து மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் பொழுது கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளை April 11 தேதிக்கு முன்னர் ஆக்டிவேட் செய்து கொள்ளவும்
    Download As PDF

    Wednesday, April 4, 2012

    5GB இலவச இட வசதியுடன் வரும் கூகுளின் புதிய சேவை Google Drive

    Cloud Storage தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து கொண்டு வரும் நவீன தொழில்நுட்பம் ஆகும். Cloud Storage என்பது நாம் நம்முடைய பைல்களை ஆன்லைனில் சேமித்து கொள்ளும் வசதி. இப்படி ஆன்லைனில் சேமிக்கும் பைல்களை எங்கிருந்தும் எந்த நேரத்திலும் ஓபன் செய்து கொள்ளலாம். மற்றும் ஸ்மார்ட் போன்களில் இருந்தும் நேரடியாக உபயோகித்து கொள்ளலாம். சிடி மற்றும் பென்டிரைவில் சேமித்து கொண்டு கூடவே எடுத்து போக வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் சேமிக்கும் பைல்களை உங்கள் நண்பர்களுக்கும் share செய்யும் வசதி உள்ளதால் அந்த பைலை அட்டாச் செய்து மெயில் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. இப்படி பல பயனுள்ள வசதிகளை கொடுப்பது தான் Cloud Storage சேவை எனப்படும்.

    இந்த Cloud Storage சேவைகளை பல நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு இடவசதியை வாசகர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன. பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கினாலும் பல பயனுள்ள வசதிகளை கொண்டு இயங்கும் Dropbox தான் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. இணையத்தை தனது கட்டுபாட்டில் வைத்திருக்கும் கூகுள் நிறுவனம் இந்த Cloud Storage வசதியிலும் குதிக்க இருக்கிறது. 5GB இலவச இட வசதியுடன் Google Drive எனப்படும் Cloud Storage சேவையை இந்த மாதத்தில் வெளியிட போவதாக வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

    இப்பொழுது இந்த வதந்திகளையும் தாண்டி அந்த தளத்தின் Screen Shot கிடைத்துள்ளதாக parkandroid இணையதளம் வெளியிட்டு உள்ளது.


    இந்த ஸ்க்ரீன் ஷாட் வைத்து பார்க்கும் பொழுது இந்த சேவையின் URL drive.google.com என்று இருக்கிறது. மற்றும் விண்டோஸ் கணினியில் இருந்து சேவையை உபயோகிக்க இலவச மென்பொருளும் வெளியிடலாம்.

    இப்படி தினம் தினம் புரளிகள் வந்து கொண்டே இருந்தாலும் Google Drive சேவையை வெளியிடாதவரை எதுவுமே உறுதியாக கூற முடியாது.
    Download As PDF