Tuesday, April 10, 2012

$49.95 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருள் முற்றிலும் இலவசமாக


இலவச மென்பொருட்களை விட கட்டண மென்பொருளில் அதிக வசதிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து மென்பொருளையும் காசு கொடுத்து வாங்க முடியாததால் பெரும்பாலானவர்கள் இலவச மென்பொருளையும் கிராக் வெர்சனையும் உபயோகிக்கிறார்கள். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி Digiarty நிறுவனம் WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசமாக வழங்குகிறது. இதன் மதிப்பு $49.95 இந்திய மதிப்பில் சுமார் Rs.2,500 ஆகும்.



சிறப்பம்சங்கள்:
  • வீடியோக்களை MKV, MTS/M2TS, MOD, AVI, MPEG, MP4, WMV, MOV, FLV, RM, WebM, Google TV ஆகிய பார்மட்களில் கன்வேர்ட் செய்து கொள்ளலாம்.
  • HD வீடியோக்களை எந்த தரமும் குறையாமல் பைல் அளவை குறைக்கிறது.
  • வீடியோக்களை iPhone, iPad, iPod மற்றும் Android சாதனங்களில் இயங்குமாறு கன்வேர்ட் செய்து கொள்ளலாம்.
  • இந்த மென்பொருளை DVD Burner மென்பொருளாகவும் உபயோகப்படுத்தலாம்.
  • மற்ற கன்வேர்ட் மென்பொருளோடு ஒப்பிடுகையில் மிகவும் வேகமாக இயங்க கூடியது.

    இலவச சலுகையை பெறுவது எப்படி:
    முதலில் இந்த லிங்கில் www.winxdvd.com/giveaway கிளிக் செய்து இலவச சலுகை தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். அங்கு சில முட்டைகள் இருக்கும் அதில் ஒவ்வொரு முட்டையையும் நீங்கள் கிளிக் செய்து உங்களுக்கான இலவச சலுகை தேர்வு செய்ய வேண்டும். கீழே படத்தில் இருப்பது போன்று வரும்.


    இது போன்று வந்தவுடன் Free Download என்ற பட்டனை அழுத்தி மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளவும். மற்றும் இதில் உள்ள இலவச லைசன்ஸ் கீயை காப்பி செய்து மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் பொழுது கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளை April 11 தேதிக்கு முன்னர் ஆக்டிவேட் செய்து கொள்ளவும்
    Download As PDF

    Related post



    No comments:

    Post a Comment

    Note: Only a member of this blog may post a comment.