Saturday, November 17, 2012

கூகுளின் 500+ அழகிய எழுத்துருக்களை MS Word, Photoshop-களில் உபயோகிப்பது எப்படி? ...

உங்கள் கணினியில் ஒரே மாதிரியான எழுத்துருக்களை உபயோகித்து போர் அடிக்குதா? நீங்கள் உபயோகிக்கும் டிசங்களுக்கு புது வகையான எழுத்துருக்கள் தேவை படுகிறதா அதுவும் இலவசமாக? ஆம் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. கூகுள் இணையதளம் Web Fonts என்ற ஒரு அருமையான சேவையினை வழங்கி வருகிறது. இதில் சுமார் 500 க்கும் அதிகமான புதுவகையான எழுத்துருக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனை எப்படி உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து வேர்ட், போட்டோஷாப் போன்ற மென்பொருட்களில் உபயோகிப்பது என பார்ப்போம்.


முதலில் கூகுளின் Web fonts தளத்தை ஓபன் செய்து கொள்ளவும். அதில் கூகுளின் அனைத்து எழுத்துருக்களும் இருக்கும் அதில் ஒவ்வொரு எழுத்துருக்களின் அருகிலும் Add to Collection என்ற என்ற நீல நிற பட்டன் இருக்கும் அதன் மீது கிளிக் செய்யவும். இதே முறையில் உங்களுக்கு பிடித்த அனைத்து எழுத்துருக்களையும் தேர்வு செய்து கொள்ளவும்.

உங்களுக்கு தேவையான அனைத்து எழுத்துருக்களையும் தேர்வு செய்த பின்னர் மேலே வலது புறத்தில் உள்ள Download your Collection என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


இன்னொரு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் கீழே படத்தில் காட்டியுள்ளதை போல download font families என்பதில் கிளிக் செய்யவும்.


நீங்கள் தேர்வு செய்த அனைத்து எழுத்துருக்களும் .zip வடிவில் உங்கள் கணினியில் சேமிக்கப்படும். நீங்கள் அதனை extract செய்து குறிப்பிட்ட பான்ட் பைலை(.ttf) காப்பி செய்து C:\Windows\Fonts என்ற இடத்தில் பேஸ்ட் செய்து விடவும்.

அவ்வளவு தான் அந்த எழுத்துரு உங்கள் கணினியில் சேர்ந்துவிடும் இனி நீங்கள் MS Word, Photoshop மற்றும் பல்வேறு மென்பொருட்களிலும் செண்டு குறிப்பிட்ட எழுத்துருவை தேர்வு செய்வதன் மூலம் அதனை உபயோகிக்கலாம்.
Download As PDF

Related post



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.