இது ஒரு இலவச போர்ட்டபிள் மென்பொருள்.இதன் மூலம் மொழிமாற்றம் மட்டுமின்றி அர்த்தம் காணலாம்.இதனை பயன்படுத்த இணைய இணைப்பு அவசியம்.இதனை நாம் டாஸ்க் பாரில் வைத்துக் கொள்ளலாம்..மேலும் இதனை நம்முடைய கணிப்பொறி START போது தன்னிச்சையாக ஆரம்பிக்குமாறும் செட்டிங் செய்யலாம்.
இதன் சிறப்பம்சங்களாக பன்மொழி அகராதி,கூக்ளி மற்றும் பிங் இணைய தேடுதல், OCR, தேர்வு செய்த மொழியினை எழுதும் பலகை (Virtual கீபோர்ட்) மற்றும் விக்கிபீடியா தேடுதல்.
இதன் சிறப்பம்சமாக நாம் தேடும் மொழியின் உச்சரிப்பையும் ஒலி வடிவில் கேட்கலாம்.நாம் தேர்வு செய்த அல்லது மொழி பெயர்ப்பு செய்த தகவல்கள் தேவை என்றால் கோப்பாக சேமிக்கும் வசதியும் உள்ளது.
இதனை பயன்படுத்தும் போது வேறு இடத்தில் கர்சரை கிளிக் செய்தால் இந்த அகராதி கடிகாரமாக மாறி கீழே உள்ளவாறு அழகாக காட்சி அளிக்கும்.நாம் வேறு பணியை செய்யும் போது அது நம்முடைய கணினியின் மேற்பரப்பிலேயே இருக்கும்.தேவையென்றால் அதில் கிளிக் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.தேவை இல்லாவிட்டால் அதனை close செய்வதன் மூலம் மீண்டும் டாஸ்க் பாரில் அமர்த்திக் கொள்ளலாம்.
இதன் மூலம் 65 மொழிகளை கையாளலாம்.இந்தியாவின் முன்னணி மொழியான ஹிந்தி,தமிழ் வட இந்திய மொழிகளான மராத்தி,குஜராத்தி மற்றும் தென்னிந்திய மொழிகளான மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்றவற்றையும் இதில் பயன்படுத்தலாம்.
தமிழ் அகராதி இலவசமாக தரவிறக்க கீழே சொடுக்கவும்

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.