Tuesday, February 7, 2012

3டி தொழில்நுட்ப மென்பொருட்கள் சட்டரீதியான இலவசம்

 விலை மதிப்பு மிக்க மூன்று மென்பொருட்களை இலவசமாக வழங்குகிறது DAZ Studio நிறுவனம்.

Daz Studio Pro ( விலை $429.95)



உங்களுக்கு பிடித்த உருவங்கள் அவதார்கள் போன்றவைகளை சுலபமாக உருவாக்க முடியும். இந்த மென்பொருள் மூலம் 3டி யில் உருவாக்கிய உருவங்களுக்கு லைட் எபெக்ட்ஸ் மற்றும் உடைகள் போன்ற அனைத்து விதமான வேலைகளும் செய்ய முடியும். நீங்களாகவே ஒரு CG படங்களை உருவாக்க முடியும். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு சுட்டி

Bryce 7 Pro (worth $249.95)



இந்த மென்பொருள் மூலம் நீங்கள் உருவாக்கிய உருவங்களை கடல், வானம், மேகம் மற்றும் தரை போன்றவற்றில் உலாவ விட்டு லேன்ஸ்கேப்பில் படங்களை உருவாக்க முடியும்.

இது குறித்த மேலும் அறிய சுட்டி

Hexagon 2.5 (worth $149.95)


இதிலும் நிறைய சொல்ல தக்க தகவல்கள் அதிகம் உள்ளதால் நேரடியாக தளத்திற்கு சென்று அறிந்து கொள்வதே நல்லது. சுட்டி


சரி இந்த மூன்று மென்பொருட்களையும் இலவசமாக தரவிறக்குவது எப்படி?

இந்த சுட்டியை கிளிக் செய்து முதலில் இந்த வலைத்தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.

சுட்டி பிறகு



புதிய பயனாளர் கணக்கினை இங்கே சென்று தொடங்குங்கள் சுட்டி


கீழுள்ள படத்தில் உள்ள பெட்டிகளில் உங்கள் தகவல்களை நிரப்புங்கள்




உங்கள் மின்னஞ்சல் முகவரியின் வழியாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்

பிறகு இந்த சுட்டியினை கிளிக் செய்து கொள்ளுங்கள் சுட்டி கீழுள்ள படத்தில் கண்ட பக்கம் திறக்க படும். அதில் உள்ள மூன்று பொருட்களையும் add to cart கிளிக் செய்யுங்கள்.


பிறகு கீழுள்ள படத்தில் உள்ளபடி ஒரு பாப் அப் தோன்றும் அதில் Checkout என்பதை கிளிக் செய்யவும்.

பிறகு கீழுள்ள பக்கத்தில் இருப்பது போல நீங்கள் ஒரு பைசா கூட செலவு செய்ய தேவையில்லை தோன்றும் பிறகு Place Order என்ற  பட்டனை அழுத்தினால் போதும்






கீழுள்ள பக்கம் வந்துவிடும். அதில் Downloads are available in your Account Profile என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கான் மென்பொருள் தரவிறக்க லிங்குகள்
தோன்றும்.


  

 நீங்கள் சரியான மின்னஞ்சல் முகவரி குறிப்பிட்டிருந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மூன்று மென்பொருட்களின் Serail எண்கள் அனுப்பியிருப்பார்கள். இந்த மென்பொருட்கள் விண்டோஸ் மேக் கணினிகளில் வேலை செய்யும்.

இது ஒரு குறுகிய கால சலுகை என்பதால் எப்பொழுது வேண்டுமானலும் மென்பொருள் இலவசமாக தரப்படுவது நிறுத்தலாம். அல்லது நீட்டிக்கபடலாம் விரைவில் தரவிறக்கிக் கொள்ளவும்.



Download As PDF

Related post



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.