Saturday, February 4, 2012

ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய


இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று மூன்று பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.




Google Chrome
இணைய உலகில் மிகப்பெரிய இடத்தை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கும் உலவி. இதன் வளர்ச்சி மற்ற பிரவுசர்களுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. இரண்டாம் இடத்தில இருந்த பயர்பாக்ஸ் உலவியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது இந்த உலவி. இந்தியாவில் முதல் இடத்தில இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. இப்பொழுது இந்த உலவியின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Chrome 18.0. Beta

Google Earth 6.2
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உலகம் உங்கள் கணினியில். உலகின் எந்த மூலையிலும் உள்ள பகுதியை நேரடியாக காணும் வசதியை செயற்கைகோள் உதவியுடன் படம் பிடித்து காட்டுவது தான் கூகுளே Earth வசதியாகும். உலகின் உள்ள அனைத்து கட்டிடங்களையும் வடிவில் காண முடியும். காடுகள், மலைகள், நதிகள், பள்ளத்தாக்குகள் என மனிதன் புகாத இடங்களிலும் கூகுளின் கேமாரா புகுந்து படம் பிடித்து நேராக பாருக்கும் உணர்வை கொடுக்கிறது.
மென்பொருளை டவுன்லோட் செய்ய - Google Earth 6.2

Firefox
உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலவிகளில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. (சமீபத்தில் தான் கூகுள் க்ரோம் இதனை முந்தி இரண்டாம் இடத்தை தட்டி சென்றது). கூகுள் குரோம் வந்த பிறகு இதன் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் நிறைய பேரின் விருப்பத்திற்கு உரிய மென்பொருளாகும்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Firefox 10.0 Beta 6

CCleaner
கணினிகளில் உள்ள தேவையற்ற பைல்களை சரியாக கண்டறிந்து அழித்து கணினியை சுத்தமாக வைத்து கொள்ள உதவும் CCLEANER மென்பொருள் பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்தும் மென்பொருளாகும். இந்த மென்பொருள் நிறுவனத்தினர் அடிக்கடி மென்பொருளை மேம்படுத்தி புதிய வெர்சன்களை வெளியிடுகின்றனர். இன்று நாம் பார்க்க போவது போர்ட்டபிள் வகை மென்பொருளாகும். ஆதலால் இதனை கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியமில்லை.
மென்பொருளை டவுன்லோட் செய்ய - CCLEANER V 3.15

Opera 11.61
மிக வேகமான இணைய உலவி என பெயர் பெற்றது ஒபேரா உலாவியாகும். பல எண்ணற்ற வசதிகளை இந்த உலவி கொண்டுள்ளது. இப்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை ஒபேரா நிறுவனத்தினர் வெளியிட்டு உள்ளனர்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய- Opera 11.61
Download As PDF

Related post



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.