Sunday, February 26, 2012

PDF கோப்பிலிருந்து Ms-Word கோப்பாக மாற்றம் செய்ய

நாம் அன்றாடம் படிக்கும் மென்னூல்கள் பெரும்பாலும் PDF கோப்பு வடிவத்திலேயே இருக்கும். pdf கோப்புகளில் உள்ளதை நம்மால் படிக்க மட்டுமே முடியும். அதிலுள்ளவைகளை நம்மால் வேர்ட் கோப்புகளைப் போன்று மாற்றம்(Edit) எதுவும் செய்ய முடியாது.



சிலநேரங்களில் PDF கோப்புகளில் உள்ள தகவல்கள் நமக்கு வேர்ட் டாகுமென்ட் கோப்புகளாக வேண்டும் என நினைக்கலாம். மேலும் அதில் பதிந்திருக்கும் தகவல்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கும். இதுபோன்ற சமயங்களில் நமக்கு இந்த மென்பொருள் உதவிகரமாக இருக்கும்.

மென்பொருளின் பெயர்: PDFZilla

PDFZilla என்ற இம்மென்பொருளைக் கொண்டு 1. PDF to Word ஆகவும், 2. PDF to RTF கோப்பாகவும், 3. PDF to TXT கோப்பு வடிவிலும் , 4. PDF to Images ஆகவும் , அதாவது படங்களாகவும் , 5. PDF to HTML ஆகவும் , 6. PDF to SWF கோப்புகளாகவும் (Flash File) கோப்புகளாக மாற்றம் செய்ய முடியும்.

இம்மென்பொருளை பயன்படுத்துவது மிக எளிது.

முதலில் இந்த இணைப்பில் சென்று மென்பொருளைத் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

தரவிறக்கிய மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவியவுடன்


1. முதலில் பச்சை நிறத்திலுள்ள + (Add) குறிபட்டனை அழுத்துங்கள்.
STEP:1

2. புதிய விண்டோ திறக்கும். அதில் மாற்ற வேண்டிய பி.டி.எப். கோப்பைத் தேர்ந்தெடுங்கள்.

STEP:2

pdf_convertor_Select_file_step_2
3.எந்த பார்மட்டிற்கு மாற்றப்பட வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுங்கள்.

STEP:3

pdf_convertor_Select_output_format_step_3


4. அடுத்து கீழிருக்கும் Start converting என்ற பட்டனை அழுத்துங்கள்.
STEP:4

pdf_convertor_click_start_converting_now_step4

5. அவ்வளவுதான்.. சிறிது நேரத்தில் நமக்கு வேண்டிய பார்மட்டில் பி.டி.எப் கோப்பானது மாற்றம் பெற்றிருக்கும்.

இம்மென்பொருளில் கட்டண மென்பொருளும் உண்டு.
 
Download As PDF

Related post



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.